ரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கத்தில் 'X'-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும்... அது ஏன் தெரியுமா..??

கார், மோட்டார் சைக்கிள், விமானங்கள், பேருந்துகள் என்றிருந்தாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு முதன்மையான போக்குவரத்து என்றால் இன்றும் ரயில்கள் தான்.

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில்வே போக்குவரத்தை பயன்படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது.



கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள். நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.

தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந்தாலும், ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன.


அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் 'X'. இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியில் 'X' என்ற குறி மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும்.

இது ஆங்கில எழுத்தான எக்ஸா..? அல்லது இதற்கு வேறு பொருள் உள்ளதா..? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Quick Line News NO 1 NEWS YouTube Channel Follow Our Quick line News



ரயிலில் பயணம் செய்த அல்லது பயணம் செய்துகொண்டு இருக்கும் பலரும் 'X' என்ற குறியை கவனித்திருப்போம்.

ஆனால் இது எதை குறிக்கிறது..?? 'X' என்பதற்கான அர்த்தம் என்ன..? என்ற சிந்தனை ஒரு சிலருக்கு தான் தோன்றியிருக்கும்.

ஒரு ரயில் முழுமையடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க 'X' என்ற குறி பயன்படுத்தப்படுகிறது.

எஞ்சின் தொடங்கி ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத்திறனை ஆராய்ந்த பிறகே, 'X' குறி ரயிலின் கடைசி பெட்டியில் வரையப்படுகிறது.

மேலும் ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும் அதன் இணைப்புகளில் எந்தவிதமான பழுதோ , பிரச்சனையோ இல்லை என்பதை 'X' குறி குறிக்கிறது.

தொடர்ந்து இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும்.


தற்போது மின்சாரத்தால் இயங்கும் இந்த விளக்கின் பயன்பாடு முன்னதாக எண்ணெய் கொண்டு ஒளிர்வூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.




ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும்.

மேலும், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பது குறித்து நிலைய அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கும் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தவும், அந்த வழித் தடத்தில் வரும் பிற ரயில்களையும் நிறுத்தவும் முடியும்.

அதனால் அடுத்தமுறை நீங்கள் ரயிலின் பயணம் செய்யும் போது, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஒரு முறை சரிபார்த்து விட்டு, ரயிலேறுங்கள்.

Comments

Popular posts from this blog

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்

கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் மாதிரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!