ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்

 தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'கைதி' படங்கள் வெளியாகின. 'பிகில்' படத்தின் தயாரிப்புச் செலவும், வெளியான தியேட்டர்கள் எண்ணிக்கையிலும் அந்தப் படம் பிரம்மாண்டப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், 'கைதி' படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

இரண்டு படங்களும் இரண்டு விதங்களாகப் பேசப்பட்டன. 'பிகில்' படம் கமர்ஷியல் படம் என்றும், 'கைதி' படம் தரமான படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், கமர்ஷியல் ரீதியில் 'கைதி' படம் பெரிய வசூலைக் குவித்தது. அதற்கு படத்திற்கு ஆதரவாக வந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்தது. சில நாட்கள் முன்பு வரை இப்படம் 80 கோடி வசூலை அள்ளியதாகச் சொன்னார்கள்.

மேலும், 250 தியேட்டர்களில் வெளியான இப்படம் மூன்றாவது வாரத்தில் 350 தியேட்டர்களாக அதிகரித்ததாக தயாரிப்பு நிறுவனமும் அறிவித்தது. இன்றும் நாளையும் படம் நன்றாக வசூலித்தால் அடுத்த வாரத்தில் வசூல் 100 கோடியைத் தாண்டும் என திரையுலகத்தில் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் கார்த்தியின் முதல் 100 கோடி படமாக 'கைதி' படம் அமையும்.

Comments

Popular posts from this blog

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்

கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் மாதிரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!