1914-ம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றில் மருந்து குறித்து தகவல்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் பல ஆயிரங்களை கடந்துள்ளது. உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளன. தடுப்பூசி பற்றிய தகவல்களும் அவ்வப்போது உலா வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் நோய்க்கு 1914-ம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றில் மருந்து குறித்து தகவல் உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவியன. பலரும் அதை ஷேர் செய்து நம் முன்னோர்களை புகழ்ந்து வந்தனர். ஆனால் அந்த தகவல் உண்மையா?





Editing Page 



Orginal Page



1914-ம் ஆண்டு பாக்கெட் வைத்தியம் என்ற புத்தகத்தில் கோரோஜன மாத்திரை என்ற தலைப்பில் சில நாட்டு மருந்து குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதை சிலர் போட்டோஷாப் செய்து கோரோன மாத்திரை என மாற்றி பதிவிட்டுள்ளனர். பார்க்கவே பழங்கால புத்தகம் போல அந்த போட்டோ இருந்ததால் பலரும் அதைப்பற்றி தெரியாமல் கூட ஷேர் செய்து ட்ரண்ட் ஆக்கி விட்டனர்.


இந்த மருந்துகள் எல்லாம் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வீட்டிலேயே தயாரிப்பது உயிருக்கே ஆபத்தாகலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். எனவே, ஒரு செய்தியை அதன் உண்மைத்தன்மைப் பற்றி ஆராயாமல் ஷேர் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த செய்தியில் இன்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இப்படி ஒரு புத்தகதம் இருந்ததா என்பதே கேள்விக்குறி தான். ஆனாலும் இந்த தகவல்கள் போலி என்பதால் நாம் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்

ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்